0


மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திற்காக 26.5மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று 25.04.2016 திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற போதே செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன் குறிப்பிட்டார்.

 அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 1,495,000ம் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்  ஞா.சிறிநேசன்  680,000ரூபாவும், பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் 300,000ரூபாயும், இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம் ஹிஸ்புல்லாஜ் 315,000ரூபாயும், சீ.யோகேஸ்வரன் 200,000ரூபாய் தங்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்தும் ஒதுக்கியுள்ளனர். மேலும் கிராமராச்சியம் வேலைத்திட்டத்தின் கீழ் 24கிராம சேவையாளர் பிரிவிலும் 24மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டமும் முன்னனெடுக்கப்படவுள்ளது. அத்துடன் விளையாட்டு அமைச்சினால் கொக்கட்டிச்சோலை விளையாட்டு மைதானம் புனரமைப்புக்கு 1மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.





Post a Comment

 
Top