இந்துமஹா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழும் இயற்கை எழில் கொஞ்சும் ஈழமணித்திருநாட்டில் அழகுறு கிழக்கிலங்கையின் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமா நகரில் வந்தோரை வாழவைக்கும் வந்தாறுமூலை எனும் புண்ணிய பூமியதில் வருவோர் வினைகளைந்து அருள் சுருக்கும் வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீ நீர்முக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் வேதாகம குருவேந்தன் ஷாஹித்திய பாஸ்கரன் ஷப்பரிஷி குருபீடாதிபதி தேசமான்ய சிவஸ்ரீ குமார வினேஸ்வரக் குருக்கள் (யாழ் வட்டுக்கோட்டை)தலைமையில் பக்தர்கள் புடை சூழ சிறப்பாக இடம்பெற்றது.
காலை 06.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு யாக பூஜை,ஹோமம்,மஹா பூர்ணாகுதி,அந்தர் பலி,பஹிர்பலி யாத்ராதானாதீகள்,யாகதீபாராதனை,வேதஸ்தோத்திர தேவாரப்பாராயணம்,கும்ப உத்தாபனம்,கும்ப வீதிப் பிரதக்ஷனம் என்பன இடம்பெற்றது.
தொடர்ந்து காலை 09.00 மணியளவில் ஸ்தூல லிங்க தூபி அபிஷேகங்களும் அரோகரா கோஷத்துடன் வேதமங்கள நாதவாத்தியங்கள் முழங்க பிரதான கும்பம் மூலாலய பிரவேஷம் நியாசங்கள் காலை 09 மணியிலிருந்து 9.45 மணி வரையில் வரும் ரிஷப லக்கிண சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா நடைபெற்று பல சமர்ப்பணம் தேவதா பூஜை சதமங்கள தரிசனம் எஜமான் அபிஷேகம் ஆசியுரை மஹாகும்பாஷேக திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டு மஹா அபிஷேகமும் மஹேஸ்வர பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் குருக்கள்மார்,கட்டிட கலைஞர்கள்,வர்ணகலைகலைஞர்கள்,மங்கள வாத்திய கலைஞர்கள்,பூமாலை அலங்கார கலைஞர் மற்றும் ஆலயத்தை அலங்கரித்த பொது அமைப்புக்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு ஆலய செயலாளரின் நன்றியுரையுடன் மஹாகும்பாபிஷேகம் நிறைவெய்தியது.
இறுதியாக அனைத்து பக்தர்களுக்கும் ஆலய திருப்பணி சபையினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.
இக் கும்பாபிஷேக நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.
தொடர்ந்து 36 நாட்கள் மண்டலாபிஷேக பூசை இடம்பெற்று இறுதி நாள் சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.

Post a Comment