0
சர்வதேச நாடக தின விழா மட்டக்களப்பு கல்லடி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி மண்டபத்தில் இன்று இன்று ஆரம்பமானது.  கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இந்த விழா நடைபெறுகிறது. 

இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இந்து கலாசார அமைச்சர் செல்லையா இராசதுரை கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் போது பாரம்பரிய கலாசார இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு, சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சுவாமி விபுலானந்தா கல்லூரியை உருவாக்கிய முன்னாள் இந்து கலாசார அமைச்சர் செல்லையா இராசதுரை, வட மோடி , தென்மோடி கூத்து கலைஞர் வெ.பரமகுட்டி மற்றும் விலாச கூத்துக்கலைஞர் ஐ.அரசரெத்தினம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.




Post a Comment

 
Top