மின்சாரத் தடையை தடுக்க அரசாங்கம் புதிய சட்டமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
மின்சாரம் தடைப்பட்டால் அதன் பொறுப்பினை மின் பொறியியலாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் விசேட சட்டமொன்று உருவாக்கப்பட உள்ளது.
அண்மையில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற மின்தடைக்கு எந்தத் தரப்பினரும் பொறுப்பினை எற்றுக்கொள்ளவில்லை.
இதனால் மின் பொறியியிலாளாகள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மின்சாரம் தடைப்படுவது குறித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் தலைமையில் அண்மையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டில் ஆட்சி செய்த அராசங்கம் மின்சார புனரமைப்பு சட்டமொன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தது. எனினும் அந்தச் சட்டத் திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை.
எதிர்வரும் காலங்களில் மின்சாரம் தடைப்பட்டால் இதற்கான பொறுப்பினை கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டமொன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment