0
பாடசாலைச் சீருடைக்காக வழங்கிய நிதிச்சீட்டு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இன்று  விஷேட உரை ஒன்றை ஆற்ற உள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வியமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய தொகை எஞ்சியுள்ளதாக தெரிவித்தார்.

குறைபாடுகள் இருப்பின் அடுத்த வருடம் அதனை நிவர்த்தி செய்து காலக்கிரமத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விநியோகிக்கப்பட்ட நிதிச்சீட்டு 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இருந்த நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top