0
மட்­டக்­க­ளப்பு – கல்­முனை பிர­தான வீதியில் வீதிக் கோடு­போடும் பணிகள் நடை­பெற்று வரு­கின்­றன.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வீதி விபத்­துக்­களை தடுக்கும் நோக்கில் பிர­தான வீதி­களில் 'யூ' வளை­வுள்ள இடங்­களை வாகன சார­திகள் முன்­கூட்­டியே அறிந்து வாக­னங்­களின் வேகத்தை குறைத்து அவ­தா­ன­மாக செலுத்­தும்­படி வேண்டி வேகத்­தடை வீதிக் கோடு­போடும் பணிகள் வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதன் ஒரு அங்­க­மாக மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட மட்­டக்­க­ளப்பு, கல்­முனை, நாவற்­குடா, கல்­லடி, நொச்­சி­முனை, மஞ்­சந்­தொ­டுவாய் ஆகிய பிர­தான வீதி­களில் அமைந்­துள்ள 'யூ' வளை­வுள்ள இடங்­க­ளுக்கு அரு­கா­மையில் மேற்­படி வேகத்­தடை வீதிக் கோடு போடும் பணிகள் தற்­போது துரிதகதியில் இடம்­பெற்று வரு­கின்­ றது.

இதனால் வீதியில் செல்லும் பொது மக் கள், பாட­சாலை மாண­வர்கள், வாக­னங்­களை ஓட்டும் சார­திகள் என பலரும் நன்­மை­ய­டை­ய­வுள்­ளனர்.
கடந்த காலங்­களில் மட்­டக்­க­ளப்பு மாவட் ­டத்தில் 'யூ' வளை­வுள்ள இடங்­களில் வாக­னங்­களை வேக­மாக செலுத்தி மாறும் போது பாரிய மற்றும் சிறிய விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

குறித்த 'யூ' வளை­வுள்ள இடங்­களை முன்­கூட்டி அறி­விக்கும் வேகத்­தடை வீதிக் கோடு­களை பிர­தான வீதிகளில்போடும் பொழுது வாகன சாரதிகள் வேகத்தை குறைக்கின்றனர். இதனால் வீதி விபத்துகளைக் குறைத்துக் கொள்ள முடியும்.

Post a Comment

 
Top