0
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட உணவகங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களும் பல்வேறு நடவடிக்கைகளையும் எச்சரிக்கையினையும் விடுத்துவருகின்றனர்.

எனினும் சில உணவகங்கள் அதனை பின்பற்றாத நிலையில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.
அன்றாடம் இயந்திர வாழ்க்கையினை அனுபவித்துவரும் நகர்ப்புற மக்கள் தமக்கான உணவுகளை உணவகங்களிலேயே பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் சில உணவகங்கள் அதிகளவான விலையினை பெறுகின்ற போதிலும் சுகாதாரம் தொடர்பிலான நம்பிக்கையிலேயே அந்த உணவகங்களில் உணவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பொதுமகன் ஒருவர் பெற்றுச்சென்ற உணவில் கராப்பான் பூச்சி இறந்து கிடந்ததைக்கண்டு, அது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,
குறித்த உணவகத்திற்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்தார்.


Post a Comment

 
Top