உலகக்கல்விக்கு பெற்றோர் கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்கள்
குழந்தைகளின் ஆன்மிக கல்விக்கு பெற்றோர் வழங்க மறந்து விடுகின்றனர்.பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படும் அக்கறையை அறநெறிக்கல்விக்கு பெற்றோர் காட்டுவதில்லை. இதனால் மாணவரின் ஆன்மிக கல்வி இன்று சவாலாக மாறியுள்ளது என இஸ்ரா பாலர் பாடசாலையின் கல்குடா பிராந்திய செயற்பாட்டாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றியாஸ் (நளீமி) தெரிவித்தார்.
வாழைச்சேனையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரா பாலர் பாடசாலையின் பெற்றோருக்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது ஓட்டமாவடி,வாழைச்சேனை பிரதேசங்களில் அதிகமான மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கோட்டத்திற் கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். இவ்வாறு சித்தியடையும் மாணவர்களின் கடந்த கால வாழ்வை பின்னோக்கி பார்த்தால் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் நிலைமைகள் குறைந்து செல்கின்றன. உலகக்கல்வியாலும் பிரயோசன
ம் இல்லாமல் அதேவேளை மார்க்கக்கல்வியையும் தொலைத்தவர்களாக மாணவர்கள் அலைந்து திரிகின்றனர். மாணவர்கள் இவ்வாறு பாடசாலைகளில் 4ஆம் தரத்திற்கு வரும்போதே புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார்படுத்தி விடுவதனால் ஆர ம்பக்கல்வியில் கிடைக்கவேண்டிய முழுமையான ஆன்மிக கல்வி குழந்தைகளுக்கு இல்லாமல் செய்யப்படுகின்றது.
எமது முன்னோர்கள் குர்ஆனை மாத்தி ரம் ஓதத்தெரிந்தால் போதும் என்றே எதிர்பார்த்தனர்.அந்தக்காலத்திற்கு அந்தக் கற்றல் சரியானதே. ஆனால் இந்தக்காலத்தில் குழந் தையை செயற்பாட்டு இஸ்லாத்துக்குள் அழைப்பதன் மூலமே எதிர்கால உலகில் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளால் முன் னெடுக்கப்படும் சதிகளிலிருந்து குழந்தை களை காப்பாற்ற முடியும் என்றார்.
Post a Comment