0
கேரளாவில் ஓன்லைன் மூலம் விபச்சாரம் நடத்தி வந்ததாக கிஸ் ஆப் லவ் அமைப்பின் நிர்வாகிகளாக கணவன் – மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காபி ஷாப் ஒன்றில் முத்தமிட்டுக் கொண்டிருந்த காதல் ஜோடிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து கேரளா முழுவதும் கல்லூரிகளில் ஒருவரை ஒருவர் முத்தமிடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த போராட்டத்துக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஓன்லைன் மூலம் விபசாரத்தில் ஈடுபட்டதாக கேரள 'கிஸ் ஆப் லவ் ' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவி ரேஷ்மி நாயர், கரசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பர் உள்ளிட்ட 8 பேரை சைபர் கிரைம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

'கொச்சு சுந்தரிகள்' என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி, அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெண் குழந்தைகளை அனுப்பி வைத்ததாகவும், கேரளா முழுவதுமே இவர்கள் ஓன்லைன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரேஷ்மி கைது செய்யப்படும்போது அவர் பொலிசார் மீது காரை ஏற்ற முயற்சித்தாகவும் கூறப்படுகிறது.
கைது நடவடிக்கையின் போது இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் காரில் தப்பி ஓடி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

'கிஸ் ஆப் லவ் ' அமைப்பினர் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

 
Top