இந்தியத் தூதரகத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வைபவத்தின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
மாத்தளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த மத்திய நிலையத்தின் மூலம் எதிர்காலத்தில் கல்வி, தொழில் பயிற்சிகளை வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த மகாத்மா காந்தி சர்வதேச மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முற்றுமுழுதாக இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையம் 88 மில்லியன் ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி சர்வதேச மத்திய நிலையத்திறப்பு விழா வைபவத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா, பிரதியமைச்சர் லக்ஷ்மண் வசந்த, மாத்தளை மேயர் ஹில்மி கரீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment