0
துவரம் பருப்பு - 1 கப், 
கடலைப்பருப்பு - 1/2 கப், 
உளுத்தம் பருப்பு - 1/2 கப், 
பச்சரிசி - 25 கிராம், 
முந்திரிப் பருப்பு - 20 கிராம், 
துருவிய தேங்காய் - 1/4 கப், 
காய்ந்த மிளகாய் - 4, 
கறிவேப்பிலை - 1 கொத்து,
உப்பு - தேவைக்கு, 
எண்ணெய் - பொரிப்பதற்கு, 
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?

3 பருப்புகள், அரிசி, முந்திரி, மிளகாய் இவற்றைக் கழுவி 2 மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஊறியதும் நீரை  வடித்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வடையாகத்  தட்டி எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: வெங்காயத்துக்கு பதில் முந்திரி, தேங்காய்த்துருவல் சேர்க்கப்பட்டுள்ளது. பண்டிகைகளின் போது படைப்பதற்கு இது  ஏற்றது.

Post a Comment

 
Top