0
மட்டக்களப்பு களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல பழைய மாணவர் சங்க வருடாந்த பொது கூட்டமானது கடந்த (10) செவ்வாய்க்கிழமை குருகுல ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், புதிய நிர்வாகத்தினரும் தெரிவுசெய்யப்பட்டனர். அதனடிப்படையில் தலைவராக சா.தயாபரன், பொது செயலாளராக ச.கொகுலதாஸ் மற்றும் பொருளாளராக ந.சதீஸ்பரனும் தெரிவாகியிருந்தனர். அத்துடன் சங்கத்தின் ஆலோசகர்களாக டி.விநாயகமூர்த்தி மற்றும் எ.மதனராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் எதிர்கால திட்டமிடல் ஒன்றுகூடல் எதிர்வரும் தை மாதம் இடம்பெறும் எனும் தீர்மானத்துடன் செயலாளரின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.

Read more at: http://www.battinews.lk/2015/11/blog-post_795.html
Copyright © www.battinews.lk

Post a Comment

 
Top