0
அண்மைய காலத்தில் வீடமைப்புத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்த வரவுசெலவுத்திட்டமாக அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் அமைந்திருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், புரட்சிகரமான பொது மக்களுக்காக முன்வைக்கப்பட்ட விசேட வரவுசெல வுத் திட்டமாக இதனைத் தான் பார்ப்ப தாகவும் கூறினார்.
வீடமைப்புத் துறைக்காக 40 ஆயிரம் இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கும் அதேநேரம், கிராமிய வீடமைப்புத் திட் டத்துக்கு பெருந்தொகை பணம் ஒதுக்கப் பட்டுள்ளது. இது மாத்திரமன்றி கிராமிய ரீதியில் 5 இலட்சம் வீடுகளை நிர்மாணிப் பதற்கான ஒதுக்கீடுகளும் செய்யப்பட் டுள்ளன.
யாரும் நினைத்திருக்காதளவு கல்வித் துறையைப் பலப்படுத்தும் வகையில் குறிப் பாக பாடசாலைகளுக்கு கூடுதலான வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகை யில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை, நாட்டு மக்களுக் காக முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செல வுத்திட்டமாகும் என அமைச்சர் அர் ஜூனா ரணதுங்க தெரிவித்தார்.
குறிப்பாக கல் வித்துறைக்காக பாரிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதுடன், அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் பலப்படுத் துவதற்கு திட்டமிட்டுள்ளோம். பிரதான உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இவ்வரவு செலவுத்திட்டம் மக்களு க்கு நிவாரணம் வழங்கும் வகையில் முன்வைக்கப்பட்டதொன்றாகும் என்றார்.

Post a Comment

 
Top