( செய்தியாளர் - மூலையூரான் )
வந்தாறுமூலை இளைஞர்கள் ஏற்பாடில் ம.ஜங்கரன் தலைமையில் மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடி கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வந்தாறுமூலை அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. நேற்று 09.11.2015 5.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி கூட்டமானது தொடர்சியாக சுமார் 7.00 மணிவரை நடைபெற்றது. ஆலய தலைவர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களில் சேவையாற்றும் இளைஞர்கள், சமுதாய முன்னேற்றத்துக்காக பாடுபடும் தொண்டாளர்கள் மற்றும் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பா.உ ச.வியாழேந்திரன் அவர்களிடம் எமது கிராமம் மற்றைய கிராமங்களை காட்டிலும் அபிவிருத்தி அடையாமை காணப்படுகிறது. அத்தோடு வெள்ளத்தினால் தொடர்ச்சியாக பாதிப்புறும் இடமாகவும், விளையாட்டு மைதானம் வளர்ச்சி இன்மை மற்றும் வீதிகள் தொடர்ந்தும் அதே நிலையில் இருப்பதையும் மேலும் பல விடயங்களையும் பொது மக்கள் சுட்டிக்காட்டினர்
இதில் பா.உ ச.வியாழேந்திரன் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில் இவ் அபிவிருத்தி கூட்டமானது நான் பதவியேற்று 70 நாட்கள் பூர்த்தியாகிய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முதலாக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டமேனவும் அவர் தெரிவித்தார்.
யுத்தங்கள் கடந்தும் எமது மக்கள் அபிவிருத்தி இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே எமது மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க நான் தயாராக உள்ளேன். அதுமட்டுமின்றி அவர் பதவியேற்று பலசெயல்பாடுகளை களமிறங்கி செய்வதையும் குறிப்பாக மட்டக்களப்பு அரசியல் கைதிகள் பலவருடங்களாக சிறைபிடிக்கப்பட்டு இருப்பதையும் முதன் முறையாக தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் குறைகளையும் கேட்டறிந்ததுடன் அவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து
கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து இவ் அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் பாராளுமன்ற உறுப்பினரை பாராட்டியதுடன் 70 நாட்களில் சேவையுடன் கூடிய வேகத்தை பற்றியும் பெரும் கௌரவிப்பை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment