0
அமெரிக்காவில் பயணிகள் இருவரை தங்களுடன் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகாகோவில் இருந்து ஃபிலாடெல்ஃபியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற 2 அமெரிக்க நாட்டவரை சக பயணிகளின் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் உருவானது.
பாலஸ்தீனத்தை பிறப்பிடமாக கொண்ட 2 அமெரிக்க பயணிகள் Southwest நிறுவனத்தின் விமானத்தில் ஃபிலாடெல்ஃபியா செல்ல விமான நிலையம் வந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் அரபு மொழியில் பேசியதாகவும், அவர்களுடன் பயணம் செய்ய தங்களுக்கு பயமாக இருப்பதாகவும் கூறி சக அமெரிக்க பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்த விமான நிலைய முகவர்கள், அவர்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களை விசாரித்த அதிகாரிகள், அவர்கள் பேசிய மொழியால் தான் பிரச்சனை உருவானதை புரிந்துகொண்டு விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் விமானத்தின் உள்ளே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் பயணிகளின் நடுவில் இருந்து ஒருவர் துணிவுடன் விசாரித்திருக்கிறார்,
வெள்ளை நிறத்தில் வைத்திருக்கும் அந்த பெட்டியை திறந்து காட்டுங்கள் என்று.
கடைசியில், அந்த பாலஸ்தீன பயணிகள் வெள்ளை பெட்டியில் எடுத்துச் சென்ற Baklava எனும் வகை இனிப்பை சக பயணிகள் அனைவருக்கும் பங்கு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறும் சமூக ஆர்வலர்கள், இதை கவனமுடன் சீர்படுத்த வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top