0
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்து எதிர்வரும் 21ம் திகதி வரையில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் குறித்து ஆராயும் விசேட குழுவின் செயலாளரிடம் முறைப்பாடு செய்ய முடியும்.எல்லை நிர்ணயம் குறித்து ஆராய்வதற்கு ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை, பிரதேச செயலகம் அல்லது மாவட்டச் செயலகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள எல்லை வரைபுகள் மற்றும் வர்த்தமானி அறிவித்தலை பார்த்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இலக்கம் 330 யுனியன் பிளேஸ் கொழும்பு 2 என்ற முகவரியில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்ற அமைச்சில் அமைந்துள்ள எல்லை நிர்ணய சபையின் காரியாலயத்திற்கு தபால் மூலமாக முறைப்பாடுகள் யோசனைகள் என்பனவற்றையும் தபால் மூலம் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top