0


கனடாவில் குடியேறும் அகதிகளின் நலனிற்காக அந்நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் வினோதமான பரிசு வழங்கியுள்ள சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கனடாவில் உள்ள ஒட்டாவா நகரில் Kalina Dunne-Farrell என்ற பெயருடைய 10 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.
சிறுமியின் பெற்றோர்கள் சிரியா நாட்டிற்கு இரண்டு முறை சென்றது மட்டுமில்லாமல், அங்கு சிரிய குடிமக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளையும் படம் பிடித்து வந்து சிறுமியிடம் காட்டியுள்ளனர்.

வீடியோவை பார்த்து கண் கலங்கிய அந்த சிறுமி, கனடா நாட்டிற்கு வரும் சிரியா அகதிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் ஒரு வழக்கம் இருக்கிறது. குழந்தைகளின் பல் கீழே விழுந்தால், அதனை பெற்றோர்கள் மறக்காமல் எடுத்து மண்ணில் போட்டு புதைத்து விடுவார்கள்.
அதே சமயம், ஒரு குழந்தையின் 6-வது பல் விழுந்தால், அதனை பெற்றோர்கள் சேகரித்து ’டூத் பேரி’யிடம்( tooth fairy) பரிசாக அளித்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று குழந்தையின் தலையனைக்கு கீழே வைத்து விடுவார்கள்.
இந்த வழக்கத்தை தான் Kalina Dunne-Farrell என்ற அந்த சிறுமியின் பெற்றோர்களும் பின்பற்றியுள்ளனர்.

சிறுமியின் வேண்டுகோளின் அடிப்படையில், அண்மையில் விழுந்த அவரது பல்லை டூத் பேரியிடம் பரிசாக கொடுத்துவிட்டு அதன் மூலம் கிடைத்த 157 டொலர் பணத்தை அகதிகளின் நிதி செலவிற்காக அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி பேசியபோது, அகதிகள் பணத்திற்காக மிகவும் சிரமப்படுவதை கண்டு வேதனை அடைந்துள்ளேன். டூத் பேரி மூலம் கிடைத்த பணம் மற்றும் தன்னுடைய ஒரு நாள் செலவினத்தை குறைத்ததால் கிடைத்த பணத்தை சேர்த்து 157 டொலரை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அகதிகளின் நலனிற்காக தன்னுடைய பல்லை கொடுத்துவிட்டு அதன் மூலம் பணம் பெற்று அனுப்பிய சிறுமியின் செயல் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பாராட்டுக்களையும் வரவேற்புகளையும் பெற்று வருகிறது.

Post a Comment

 
Top